கொரோனா தொற்றால் மேலும் 9 பேர் உயிரிழப்பு

164 0

நேற்று (08.11.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் 03 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 04 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 03 ஆண்களும் 02 பெண்களுமாக 05 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று கொரோனா தொற்றால் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு இன்று 162 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரை 667735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.