மாட்டை காப்பாற்றச் சென்று விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

56 0

வடமராட்சி, மாலைசந்தை தனியார் கல்வி நிலையத்திற்கு முன் வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயற்சித்த போது முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த விபத்தில்  படுகாயமடைந்த கரணவாய், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாம்பழம் மகேந்திரன் (வயது 50) என்ற முச்சக்கர வண்டி சாரதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகயீனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த பின் வீடு திரும்பிய போது, மாடு ஒன்று வீதியின் குறுக்கே வந்துள்ளது.

குறித்த மாட்டை காப்பாற்ற முயற்சித்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, வீதி வாய்க்காலுக்கு மேலாக பாய்ந்து தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.