அட்டப்பள்ளத்தில் இரு மாணவர்கள் சாதனை

189 0

கல்முனை வலயத்தில் மிகவும் பின்தங்கிய அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய மாணவர்கள்  இருவர் மாவட்ட மட்டத்தில் பங்குபற்றி 2022 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

12 வயதிற்குட்பட்ட நீளம் பாய்தல் போட்டியில்  து.பவிக்ஸா 1ஆம் இடத்தையும், 14 வயதிற்குட்பட்ட  குண்டுபோடுதல் போட்டியில் ச.டோஜித்  2ஆம்  இடத்தையும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வில் அதிபர் ச.ரகுநாதன், பிரதிஅதிபர் த.நடேசலிங்கம், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் த.ம.றிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பாடசாலையில் விளையாட்டுமைதானம் இல்லை, கல்முனை கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ரப்பிரதேச பாடசாலை பயிற்றுவிப்பாளரின் அயராதமுயற்சி வெற்றிக்கு காரணம் என அதிபர் ச.ரகுநாதன் தெரிவித்தார்.