நுவரெலியா பம்பரகலையில் 20 வயது மாணவனை காணவில்லை

241 0

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை பகுதியில் மாணவர்  ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுந்தரலிங்கம் சசிதரன் என்ற குறித்த மாணவன்  கடந்த 03 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை மாணவனை கண்டுபிடிக்கப்படவில்லை.

20 வயதுடைய குறித்த மாணவன்  வீட்டில் இருந்து நுவரெலியா பிரதான நகருக்கு சென்று  மீண்டும் வீடு திரும்பவில்லை என  குறித்த மாணவனின் பெற்றோர் கடந்த 6 ஆம் திகதி  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மாணவனை கண்டவர்கள் 0763497788 (ஆனந்தராஜ்) என்ற பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.