வெல்லாவெளியில் தோட்டாக்கள் மீட்பு

216 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கோட்டைமுனை பகுதியில் ஒரு தொகை துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஜி.பி.எம்.ஜி துப்பாக்கியின் 570 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தோட்டாக்கள் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.