ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றில் ஆற்றிய கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று 09 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.
சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீது மூன்று நாட்களுக்கு சபை ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் எதிர் தரப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து மூன்று நாள் விவாதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 03ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
2022ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்டம் திருத்தம் செய்யப்பட்டு இடைக்கால வரவு செலவு செலவு திட்ட வரைபு இன்று சபையில் சமர்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த வரைபு நாளை சபையில் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன் 09 ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்த இரத்து செய்யப்பட்ட தெரிவு குழுக்கள் மற்றும் சபைகளை மீள் ஸ்தாபிக்கும் நடடிவக்கைகள் இன்று முன்னெடுக்கப்படும்.

