யாழில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள்

121 0

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.

யாழ்.நகரை அண்டிய சிவகுருநாதன் வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘சுப்பர் கப்’ ரக மோட்டார் சைக்கிளே இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.