ஜோசப் ஸ்டாலினுடன் பேசினார் ரணில்

53 0

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப்ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என  தகவல்கள் வெளியாகின்றன.

அவரது கைது சட்டவிவகாரம் யார் சட்டங்களை மீறினார்கள் என்பது குறித்து தீர்மானிப்பதில் பிரச்சினைகள் உள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அரகலய உறுப்பினர்கள்  அமைப்புமுறை மாற்றத்தை கோரினார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அரகலயவை பொறுத்தவரை நல்ல விடயங்களும் உள்ளன தீமையான பக்கமும் உள்ளது சிறந்த விடயங்கள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தி முன்னோக்கி நகரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.