கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

164 0

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03)  இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில்  உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எம்.நஸார் (60 வயது) எனவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து கட்டுத்துவக்குடன் சென்ற போது, குறித்த துவக்கு தானாகவே வெடித்தமையால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அதிக இரத்தப்போக்குக் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குடும்பஸ்தரின் சடலம்,  திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.