மூன்றரை வயது சிறுமி மரணம்

250 0

சுவர் விழுந்து மூன்றரை வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை அணைக்கட்டு பகுதியில் வைத்து நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

பழைய சுவர் ஒன்றுக்கு அருகில் சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியதால் சுவர் விழுந்ததில் உசனார் பாத்திமா றீமா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.