தைவானின் ஜனநாயக பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம்போல் துணை நிற்கும் – நான்சி பெலோசி

16 0

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தைவான் சென்றார். தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நான்சி பெலோசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். அதன்பின் நான்சி பெலோசி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது.

தைவானிலும், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது. தைவானை அமெரிக்கா கைவிட்டுவிடாது. என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல். வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தைவான்.

சவால்களை சந்தித்தபோதிலும் அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் தைவானுடன் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செய்தியையே நாங்கள் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்து அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசியபின் நான்சி பெலோசி தனியாக அமெரிக்க விமானம் ஒன்றில் தைபே நகரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.