இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 144 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,823 பேர் நலம் பெற்று உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,37,057 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது நேற்றை விட 2,735 குறைவாகும். கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 47 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,477 ஆக உயர்ந்தது.

