சிங்கப்பூரிற்கு வந்த வெளிநாட்டவரை அவரது அரசாங்கம் தேடினால் சிங்கப்பூர் என்ன நடவடிக்கை எடுக்கும்?

237 0

சிங்கப்பூரிற்கு வந்த வெளிநாட்டவரை அவரது அரசாங்கம் தேடினால் அது குறித்து அந்தநாடு வேண்டுகோள் விடுத்தால் சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் உரிய நடவடிக்கையை எடுக்கும் என அந்த சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமான பயண ஆவணங்கள் உட்பட உரிய தேவைகளை கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

எனினும் எங்கள் தேசிய நலன்களை அடிப்படையாக வைத்து ஒருவருக்கு உரிய அனுமதியை மறுக்கும் உரிமை எங்களிற்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடொன்றினால் தேடப்படும் நபர் சிங்கப்பூர் ஊடாக பயணம் செய்வதற்கு அனுமதிப்பது குறித்த  அந்த நாட்டின் கொள்கை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.