கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த விசேட சலுகையையும் வழங்கவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

237 0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த விசேட சலுகையையும் வழங்கவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் பதவி விலகவேண்டும் என உருவான மக்கள் எழுச்சியை தொடர்ந்து  நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டிலிருந்து மாலைதீவிற்கு சென்ற பின்னர் கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்தார்.

பொதுவாக சிங்கப்பூர் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது அரச தலைவர்களிற்கு விசேட சலுகைகள் விடுபாட்டுவிவியன் பாலகிருஸ்ணன்ரிமை விருந்தோம்பல் போன்றவற்றை வழங்குவதில்லை என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறப்பு சலுகைகள்  விடுபாட்டுரிமை போன்றவற்றை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரிற்கு விஜயம் மேற்கொண்ட இடைத்தங்கல் பயணத்தை மேற்கொண்ட வெளிநாட்டு தலைவர்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து சிங்கப்பூரின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் சியாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஏதாவது பொதுவளங்களை பயன்படுத்தியதா இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள விவியன் பாலகிருஸ்ணன் ராஜபக்சவிற்கு சிறப்பு சலுகைகளையோ விடுபாட்டுரிமையோ விருந்தோம்பலையோ வழங்கிவில்லை என குறிப்பிட்டுள்ளார்.