அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- 7 பேர் படுகாயம்

266 0

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் துப்பாக்கி சூடு அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புளோரிடா மாகாணம் ஆர்லண்டோ பகுதியில் மர்ம நபர் ஒருவன் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் பொது மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டான்.

இதில் 7 பேர் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டு சேர்க்கபட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.