சீனா கப்பல் விவகாரத்திற்கு உயர்மட்டம் தீர்வை காணவேண்டும் – ஹர்சா

226 0

சீனா கப்பல் விவகாரம் தொடர்பில் இந்தியா உயர்மட்டத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள்காட்டி ஹர்சா டி சில்வா டுவிட்டரில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

சீனா கப்பல் விவகாரம் கையைமீறி செல்வதற்கு முன்னர் உயர்மட்டத்தில் இதற்கு தீர்வுகாணப்படும்என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவும் சீனாவும் நம்பகதன்மை மிக்க நண்பர்கள் நாங்கள் நிச்சயமாக அதனை மாற்றவேண்டியதில்லை என அவர்தெரிவித்துள்ளார் .

குறிப்பாக எங்களிற்கு அந்த இரு நாடுகளின் உதவிகள் மிகவும் அவசியமாக உள்ள தருணத்தில் நண்பர்களை மாற்றவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.