நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணி மண்டபம்- அமைச்சர் ஆய்வு செய்தார்

205 0

நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப் பட்டினத்தில் அமைந்துள்ள அவ்வையார் விஸ்வநாதர் சுவாமி கோவில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தினை அமைச்சர் பி.கே சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தலைமையில் அமைந்த அரசு பொறுப்பேற்று 14 மாத காலம் முடிவடைவதற்குள்ளாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து திருப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் துளசியாப் பட்டினத்தில் அவ்வையார் மணிமண்டபம் கட்டப்படவுள்ள இடத்தினையும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆகிய கோயில்களையும் ஆய்வு செய்தோம்.

திருவாரூர் தியாராஜ சுவாமி கோயிலின் நடைபாதைகளை முழுவதுமாக கற்களால் அமைக்கப்படுகின்ற பணிக்கு சுமார் 5.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது இந்து சமய அற நிலையத்துறை ஆணையர்.ஜெ.குமரகுருபரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், இணை ஆணையர்பொன். ஜெயராமன், மண்டல உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.