பிரான்ஸ் நாட்டில் மேலும் 3 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு

392 0

201607151005489267_President-Hollande-Extends-France-State-of-Emergency-After_SECVPFபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 125-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவசரநிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து, நீட்டிக்கப்பட்டுவந்த இந்த அவசரநிலை சட்டக் காலம் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

இந்நிலையில், நேற்று நீஸ் நகரில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலில் 80-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தற்போது அமலில் இருந்து வரும் அவசரநிலை சட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டார்.