அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் – இந்திய இராஜதந்திரிகள் கடும் எதிர்ப்பு

209 0

இலங்கையில் சீனா ஆழமாக கால்பதித்ததை தொடர்ந்து அங்கு தனது செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா சீனாவின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் செய்யவுள்ளமை குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன் கப்பல் நடமாட்டதரவுகள் யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலொன்று இலங்கையின் தென்பகுதி அம்பாந்தோட்டை கடலை நோக்கி செல்வதையும் 11 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லவுள்ளதையும் உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயம் குறித்தும் இந்தியாஅரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்கின்றது பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஹரின்டம் பக்சி தெரிவித்துள்ளார்.

இதுவே தெளிவான செய்தியாகயிருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றது இந்த செய்தி யாருக்கானது என்பதை அவர் தெரிவி;க்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை,இலங்கை அதிகாரிகளிடமிருந்து உடனடியாக கருத்துக்களை பெற முடியவில்லை.இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் இந்திய இராஜதந்திரிகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் வாய்மொழி மூலம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என இலங்கை அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சி

யுவான் வாங் 5 என்ற சீன கப்பல் அடுத்த வாரம் அம்பாந்தோட்டைவரவுள்ளது என புதிய பட்டுப்பாதை திட்டம் தொடர்பான இலங்கையின் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை இந்து சமுத்திரத்தின் மேற்பகுதியில் செய்மதி கட்டுப்பாடு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் என அந்த நிறுவனம் எந்த தரப்பையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளது.

கடன்களை திருப்பி செலுத்த முடியாததன் காரணமாக இலங்;கை தனது தென்பகுதி துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை 2017 ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக சீனாவிற்கு 99 வருட குத்தகை;கு வழங்கியது

15 பில்லியன் டொலர் துறைமுகம் சீனாவின் தளமாக மாறலாம் என்பது குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கரிசனை கொண்டுள்ளன.

ஹம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் உள்ள சீனாவின் உதவியுடனான திட்டங்களில் சீனா முதலீடு செய்வதை வரவேற்கின்றோம் என இலங்கை அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு நிதிவழங்கிய நாடாக சீனா காணப்படுகின்றது சீனா விமானநிலையங்கள் துறைமுகங்கள் பெருந்தெருக்கள் போன்ற திட்டங்களிற்கு நிதி உதவி செய்துள்ளது.இது இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தற்போது ஏழு தசாப்தகாலத்தில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,இந்தியா இந்த வருடம் மாத்திரம் 4 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்கியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் செல்லவுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் நிட்டின் ஏ கோகலே 2014 இல் சீன நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு இலங்கைஅனுமதித்ததையும் இது இந்தியாவிற்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் 2014 என கேள்வி எழுப்பியுள்ள அவர் ஆபத்தற்ற துறைவருகையா அல்லது வேண்டுமென்றே சீண்டும் நோக்கமா என கேள்வி எழுப்பியுள்ளார்.