சமந்தா பவர் இந்தியாவில் – இலங்கை நிலவரம் குறித்தும் பேச்சுவார்த்தை

164 0

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் இலங்கை நிலவரம் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

சமந்தா பவர் 25 முதல் 27 ம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி காலநிலை மாற்றம் போன்ற சர்வதேச விவகாரங்கள் இந்தியாவில் சமந்தா பவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம்பெற்றிருந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

26ம் திகதி சமந்தா பவர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கருத்துசுதந்திரம் சிறுபான்மை குழுக்களின் உரிமைகளை பாதுகாப்பது உட்பட பல விடயங்கள்குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை முன்னேற்றுவதற்காக சிவில் சமூகத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்த அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளரையும் சமந்தா பவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் மூலோபாய சகாக்கள் மற்றும் பல அபிவிருத்தி விவகாரங்களில் ஒத்துழைப்பாளர்கள் என்பதை மீள உறுதி செய்வதே இந் சந்திப்பின் நோக்கம் என தெரிவித்துள்ள யுஎஸ்எயிட்டின் பதில் பேச்சாளர் செஜால் புலிவர்ட்டிரி அவர்கள் பிராந்தியம் குறித்தும் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்தும் இலங்கை பொருளாதார நெருக்கடி யை எதிர்கொண்டுள்ள தருணத்தில் அமெரிக்காவின் உதவி குறித்தும் ஆராய்ந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.