வங்குரோத்தான இலங்கையின் மருத்துவமனைகள் தட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன- ஏஎவ்பி

170 0

இலங்கையின் மிகப்பெரிய மருத்துவமனையில் வோர்ட்கள் முற்றிலும் வெறிச்சோடிப்போய் இருளில் காணப்படுகின்றன.

எஞ்சியுள்ள சில நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் வலிவேதனையுடன் காணப்படுகின்றனர், மருத்துவர்கள்  தங்கள் வேலைக்காக சமூகமளிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

தென்னாசியாவின் ஏனைய நாடுகளால் பொறாமையுடன் பார்க்கப்பட்ட இலவச அனைவருக்குமான சுகாதார சேவைக்கு பொருளாதார நெருக்கடி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரிழிவு உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மூட்டு வலியினால் அவதிப்படும் தெரேசா மேரி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கொழும்பிற்கு செல்கின்றார்.

இறுதியாக மருத்துவமனைக்கு அவர் சென்ற விதம் மிகவும் வேதனைக்குரியது  வாகனங்கள் எதுவும் இல்லாததால் அவர் மூன்று கிலோமீற்றர் நடந்தே சென்றார்.

நான்கு நாட்களின் பின்னர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோதிலும் அவர் இன்னமும் தனது காலில் எழுந்துநிற்க முடியாதவராக காணப்படுகின்றார்.மானியவிலையில் வழங்கப்படும் வலிநிவாரணிகள் மருந்தகத்தில் இல்லாததே இதற்கு காரணம்.

வைத்தியர்கள் தனியார் மருந்தகமொன்றில் மருந்தினை வேண்டுமாறு கேட்டுக்கொண்டனர் ஆனால் அதற்கான பணம் என்னிடமில்லை என அவர் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

எனது முழங்கால்கள் இன்னமும் வீங்கிய நிலையில் உள்ளன எனக்கு கொழும்பில் வீடு இல்லை நான் எவ்வளவு தூரம் நடக்கவேண்டுமோ தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விசேட கிசிச்சை தேவைப்படுபவர்களிற்கு தேசிய வைத்தியசாலையில் கிசிச்சை வழங்கப்படுவது வழமை.

ஆனால் அது தற்போது குறைந்த எண்ணிக்கையான பணியாளர்களுடன் இயங்குகின்றது அனேகமான வோர்ட்கள் நோயாளர்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன.

சத்திரகிசிச்சை சாதனங்கள் உயிர்காக்கும் மருந்துகள் விநியோகம் முற்றாக முடிவடைந்துள்ளது,அதேவேளை கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு மருத்துவர்களும் நோயாளிகளும் கிசிச்சைக்காக மருத்துவமனைகளி;ற்கு வரமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சத்திரசிகிச்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்ட நோயாளிகள் பலர் சமூகமளிக்கவில்லை என ஏ.எவ்பிக்கு தெரிவித்தார் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்.

ஏனையவர்கள் வேலைக்கு வரமுடியாததால் சில மருத்துவ பணியாளர்கள் மேலதிக நேரம் பணியாற்றுகின்றனர் அவர்களிடம் கார் உள்ளது எரிபொருள் இல்லை என அவர் தெரிவித்தார்.

இலங்கை தனக்கு தேவையான 85 வீதமான மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இறக்குமதி செய்கின்றது ஏனைய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்கின்றது.

ஆனால் நாடு தற்போது வங்குரோத்து நிலையில் உள்ளது போதிய அந்நியசெலாவணியின்மை பொருளாதாரத்தை இயக்குவதற்கான போதியளவு பெட்ரோலையும்,நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கான போதியளவு மருந்துகளையும் பெற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வழமையான வலிநிவாரணகள் அன்டிபயோட்டிக்ஸ் சிறுவர்களிற்கான மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது,ஏனைய மருந்துகளின் விலைகள் கடந்த மூன்று மாதங்களில் நான்குஐந்து மடங்குகள் அதிகரித்துள்ளன மருந்தக உரிமையாளர் கே மதியழகன் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

மருந்துகள் இல்லாததால் நோயாளர்களின்மருந்துசீட்டுகளில் பத்தில் மூன்றை நிராகரிக்கவேண்டிய நிலையில் நானும் எனது சகாக்களும் உள்ளோம் என்கின்றார் அவர் .

பல அடிப்படை மருந்துகள் முற்றாக முடிவடைந்துவிட்டன,என்ன மருந்துகள் உள்ளன என்பது தெரியாமலே மருத்துவர்கள் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு நோயாளிகளிற்கு அறிவுறுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முற்றாக வீழ்ச்சியடையும் நிலை

90 வீதமான மக்கள் நம்பியிருக்கின்ற அரசமருத்துவசேவையின் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தகவல்களை வழங்க மறுத்தனர்.

எனினும்; மருத்துவர்கள் தாங்கள் வழமையான சத்திரகிசிச்சைகளை நிறுத்தவிட்டு உயிர்காக்கும் சத்திரகிசிச்சைகளை மாத்திரம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர். மேலும் வழமையான மருந்துகளிற்கு பதில் குறைவான பயனுள்ள மாற்று மருந்துகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் ஒருகாலத்தில் வலுவானதாக காணப்பட்ட சுகாதார துறை தற்போது நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அறிக்கையொன்றில் தெரிவித்தார்.மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

நெருக்கடி தொடர்ந்தால் அதிகளவு குழந்தைகள் உயிரிழப்பார்கள் மந்தபோசாக்கு மிகவும் அதிகமாக காணப்படும் மருத்துவர் வாசன் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

இது எங்கள் சுகாதாரஅமைப்புமுறை வீழ்ச்சியடையும் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.