ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழு தலைவராக, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு மேலதிகமாக அவர், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க கடமையாற்றிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்த பின்னர் பிரதமரின் பணிக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது அவர் ஜனாதிபதி பணிக் குழு பிரதானியாகவும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

