கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட 5 செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜோசப் ஸ்டாலின் (ஆசிரிய தொழிற்சங்கம்), அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், லஹிரு வீரசேகர (Youth for Change), வசந்த முதலிகே (IUSF), எரங்க குணசேகர (SYU) ஆகியோருக்கே இவ்வாறு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

