ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – பாராளுமன்ற விவாதம் நாளை

110 0

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்திய சம்பவம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் நாளை (27) நடைபெறவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று விவாதத்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், இன்று பாராளுமன்றம் கூடி பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதுடன் எரிபொருள் பிரச்சினை அரசாங்கத்தை நடைமுறையில் பாதித்துள்ளதால் எதிர்வரும் பாராளுமன்ற தினத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.