முன்னாள் ஜனாதிபதி செயலர் காமினி செனரத், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப்பகுதியிலும் ஜனாதிபதி செயலராக காமினி செனரத் கடமையாற்றியிருந்தார்.
8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதும் அவரது செயலராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, 35 வருட கால அரச நிர்வாக சேவை அதிகாரியான காமினி செனரத்தை ஆலோசகராக நியமித்துக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
காமினி செனரத், ஜனாதிபதி செயலராகவும், பிரதமரின் செயலராகவும் கடமையாற்றிய நீண்ட அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

