இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 40,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உர விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறவுள்ள 65,000 மெற்றிக்தொன் உரத்தில் முதற்கட்டமாக 40,000 மெற்றிக்தொன் உரம் கிடைக்கப்பெற்றுள்ளது.பெரும்போக விவசாயத்தை இலக்காகக் கொண்டு தற்போது உர விநியோகம் 60 சதவீதமளவிற்கு முழுமையடைந்துள்ளது.
மரகறி உற்பத்திக்கு தேவையான கலப்பு உரம் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் இரு வாரகாலத்திற்குள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்.இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

