அரச அதிகாரிகள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

228 0

அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகளை அழைப்பதை கட்டுப்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை, தவறாக பயன்படுத்தி கடமைக்கு சமுகமளிக்கக்கூடிய அதிகாரிகள், கடமைக்கு சமுகமளிக்காத நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள குறித்த சுற்றறிக்கையில், அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் இணையவழியாக முடியாத கடமைகளை நடத்துவதற்கு தேவையான பணியாளர்களை அழைப்பதை இந்த சுற்றறிக்கை தடுக்காது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவிக்கிறார்.