முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்! – அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம்

168 0

புதிய பிரழ்வுடன் கூடிய கொவிட்19 நோய் மீண்டும் தலைதூக்கி இருக்கின்றது. அதனால் முகக்கசம் அணிவது தொடர்பாக சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்கவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் இயக்குனர் வைத்தியர் ஹரித்த அழுத்கே தெரிவித்தார்.

கொவிட்19 வைரஸ் புதிய வடிவில் மீண்டும் பரவி வருவது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய பிரழ்வுடன் கூடிய கொவிட்19 நோய் மீண்டும் தலைதூக்கி இருக்கின்றது. அதனால் முகக்கசம் அணிவது தொடர்பாக சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்கவேண்டும். குறைந்தபட்சம் கொவிட் தீவிர எச்சரிக்கை வலயங்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்குவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.

உலகில் அதிகமான நாடுகள் கொவிட்19 தொடர்பாக முறையான தீர்மானங்களை எடுத்துவரும் நிலையில் இலங்கையில் இதுவரை இதுதொடர்பாக கவனம் செலுத்தப்படாமல் இருக்கின்றது. அத்துடன் தற்போது செயலிழந்திருக்கும் கொவிட் தொடர்பான தொழிநுட்ப குழுவை மீண்டும் கூட்டி, எதிர்காலத்தில் இடம்பெறும் அழிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பீ.ஏ,5 என்ற புதிய கொராேனா பிரழ்வு உலகம் பூராகவும் பரவி நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 30வீதம் அதிகரித்திருக்கின்றது. மிகவும் விரைவாக பரவும் இந்த புதியவகை பிரழ்வு இலங்கைக்கு வந்திருக்கின்றதா என தேடிப்பார்க்க இதுவரை எந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. இந்த தினங்களில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் நோயாளர்கள் மத்தியில் புதிய கொராேனா நோயாளர்கள் இருக்கலாம் என மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்.

அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த வளம், மருந்து, அதி தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் இல்லாமை தற்போதும் வைத்தியசாலை கட்டமைப்புகளில் இல்லாமல் இருக்கின்றன. அதனால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள்  எச்சரிக்கையான நிலைமை இருக்கின்றது. தற்போது பீ.சீ.ஆர். மற்றும் என்டிஜன் பிரசோதனைகள் ஆயிரம் மேற்கொண்டால் அதில் 50 நோயாளர்களை இனம் காணப்படுகின்றனர். அதேபோன்று 3நாளைக்கு ஒரு முறை ஒரு நோயாளர் மரணிக்கிறார் என்றார்.