அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல் என்பது சர்வதேச சட்டங்களிற்கு முரணானது, இவ்வாறான தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலக பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளதாவது
கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் அருகே ஆர்ப்பாட்ட முகாமை அகற்றுவதற்காக இலங்கை பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக தேவையற்ற பலத்தை பிரயோகித்தமை குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம். தங்கள் முகாம்களை கலைக்கப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டி சில மணிநேரங்களின் பின்னர் இது இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பத்திரிகையாளர்கள் சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதை நாங்கள் கண்டிக்கின்றோம்.
வெள்ளிக்கிழமை அதிகாலைக்கு முன்பாக அனேகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் உறங்கிக்கொண்டிருந்தவேளை 2000க்கும் அதிகமான பொலிஸார் இராணுவத்தினரை உள்ளடக்கிய 2000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குள் ஆவேசமாக நுழைந்து கூடாரங்களை பிடுங்கி எறிந்தனர் பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகின்றது 48 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை காயமடைந்தவர்கள் மருத்துவ உதவிகளை பெறமுடியவில்லை.
பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர்களையும் சட்டத்தரணிகளையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது குறிப்பாக சம்பவங்கள் பதிவு செய்ய முயன்றவர்கள் அவற்றை நேரடிஒளிபரப்பு செய்யமுயன்றவர்கள் கையடக்க தொலைபேசிகளை வைத்திருந்தவர்களை தாக்கியுள்ளனர்.
இருவர் காயமடைந்துள்ளனர், கூடாரங்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை அழிக்கப்பட்டன கைப்பற்றப்பட்டன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தகவலின்படி இரண்டு சட்டத்தரணிகள் தாக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகளிற்கு ஆர்ப்பாட்டங்களை கண்காணித்து அது குறித்து அறிக்கையிடவேண்டிய கடப்பாடு உள்ளது , ஆகவே அவர்கள் தங்கள் கடமைகளை முன்னெடுக்கும்போது பாதுகாக்கப்படவேண்டும், எந்த வகையிலும் தடுக்ககூடாது.
அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல் என்பது சர்வதேச சட்டங்களிற்கு முரணானது,இவ்வாறான தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கி;ன்றோம்.
சர்வதேச சட்டங்களின் கீழ் மிகவும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஒன்றுகூடிய பொதுமக்களை கலைக்க முடியும்.பலத்தை இறுதிவழிமுறையாக மிகவும் தேவையான சூழ்நிலைகளில் கோரப்பட்ட சட்டபூர்வ நோக்கத்திற்கு சமாந்திரமாக பயன்படுத்தலாம்.
நாங்கள் முகாம்கள் மீதான தாக்குதல் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு அச்சம் தரும் செய்தியை தெரிவிக்கின்றது என்பது குறித்து கவலை கொண்டுள்ளோம்,
அனைவருக்கும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொருளாதார சமூக நிலை குறித்த தங்கள் விரக்தியை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கான உரிமையுள்ளது .
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பலத்தை பயன்படுத்தி தீர்வை காணமுடியாது பரந்துபட்ட அரசமைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை சர்வதேச சமூகத்;தின் ஆதரவுடன் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்..
இலங்கையின் புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலிற்கு தீர்வை காண்பதன் மூலம் இலங்கையர்கள் அனைவருக்கும் நன்மையளிக்க கூடிய நேர்மையான கட்டமைப்பு நிறுவன சீர்திருத்தங்களை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

