காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் இராணுவமனோநிலையின் வெளிப்பாடு- டலஸ்

261 0

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான தாக்குதலை இராணுவமனோநிலையின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும  இதனால் நாட்டிற்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நள்ளிரவிற்கு பின்னர் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான முற்றிலும் தேவையற்ற தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ளளேன்.

பதவியேற்ற சில மணிநேரங்களின் பின்னர் இராணுவமனோநிலையின் வெளிப்பாடு நமது தேசத்திற்கு மிகவும் தீங்கை விளைவிக்கும்.

சர்வதேச சமூகத்திற்கு இது விரும்பத்தகாத ; செய்தியை தெரிவிப்பதுடன் காயங்களை குணப்படுத்தும் செயற்பாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.