அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் -நோர்வே

286 0

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் என நோர்வே தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

சம்பவம் தொடர்பில் நோர்வே தூதுவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம். சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகளை மதிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு என நோர்வே தூதுவர் தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.