போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – ஹர்ஷ டி சில்வா

365 0

அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும் ஜனாதிபதிக்கு மக்களானை இல்லாமல் பாராளுமன்றத்தில் கிடைத்த அதிகாரத்தை இவ்வாறு அடக்குமுறைக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதிகாலை போராட்டகாரர்கள் மீது தாக்குதல் சம்பவம் நாட்டிற்கு ஒரு கறையாகும். அது நம் நாட்டை இன்னும் பாதாளத்திற்கு இட்டுச் செல்லும்.

அமைதியான, நியாயமான போராட்டத்தை நான் அன்றும் இன்றும் ஆதரிக்கிறேன். தொடர்ந்து ஆதரிப்போம். இருப்பினும் போராட்டம் என்று கூறும் சிலரின் தவறான மற்றும் அடக்குமுறை நடத்தையை நான் ஏற்கவில்லை. இதன் காரணமாக மக்கள் ஏற்காத இது போன்ற செயல்களை எம்மால் அங்கீகரிக்க முடியாது.

அமைதியான போராட்டம் மட்டுமே தொடர வேண்டும். இந்நிலையில் காலை போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலை மீண்டும் கண்டிக்கிறேன்.

மேலும் ஜனாதிபதிக்கு மக்களானை இல்லாமல் பாராளுமன்றத்தில் கிடைத்த அதிகாரத்தை இவ்வாறு அடக்குமுறைக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த நாட்டை மீட்பதில் உண்மையான விருப்பம் இருந்தால் அவர் சர்வ கட்சி அரசாங்கத்தை நியமித்து பாராளுமன்றத்தில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.