ஊடகவியலாளர்கள் – சட்டத்தரணிகளை தாக்குவதா ஜனநாயகம்..!

100 0

காலி முகத்திடலில் இராணுவத்தினர் திடீரென புகுந்து மேற்கொண்ட தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியிருக்கும் இலங்கை முதல் படியிலேயே தோல்வியடைந்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்காதென சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவினர் தற்போது காலி முகத்திடலுக்கு வருகைத்தந்துள்ள நிலையில் அங்குள்ள சட்டத்தரணி ஒரு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் தங்கள் கடமைகளை செய்யும் போது அவர்களை தாக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை.

ஜனநாயக நாடு என கூறிவிட்டு பணி செய்ய வந்தவர்களை தாக்குதற்கான அதிகாரத்தை விமானப்படை மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கியது யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.