இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- புரளி கிளப்பிய பயணி கைது

211 0

இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்றிரவு 8.20 மணிக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், விமானம் முழுவதையும் சோதனை இடப்பட்டது.  இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது புரளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளியை கிளம்பியதாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.