காலிமுகத்திடலில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த தேவையற்ற ஈவிரக்கமற்ற பலப்பிரயோகம் இந்த நாட்டிற்கு எந்த வகையிலும் உதவியாக அமையாது நாட்டின் கௌரவத்திற்கும் சர்வதேச அளவில் உதவியாக அமையாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பல சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
விபரங்கள் இன்னமும் முழுமையாக கிடைக்காத போதிலும்நுவான் போபகே உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
அதிகாரிகள் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் அனைவரும் எங்குவைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.

