ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களாக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் சேவைகளுக்காக தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தனது வாகனத்தில் இருந்து இறங்கி பாராளுமன்றத்திற்கு வெளியே கடமையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வீரர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை பாதுகாத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் உழைத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

