இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்று நேரத்தில் ஆரம்பம்

180 0

பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

இரகசிய வாக்கு சீட்டுக்களை பிரிதொரு நபருக்கு காண்பிக்கக் கூடாது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரது பெயருக்கு அருகிலுள்ள கூட்டில் ”1′  என இலக்கத்தை குறிப்பிட வேண்டும். அவ்வாறில்லை எனில் அந்த வாக்கு செல்லுடியற்றதாக கருதப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதேவேளை, டலஸ் – சஜித் கூட்டணி ; நாட்டின் நெருக்கடியை தீர்வுக்குக் கொண்டு வருமென தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.