அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெறும் வாக்கெடுப்பினை ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நிறைவு செய்ய சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ;(19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது மேற்கண்டவாறு ; வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைக்கமைய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்ய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சகல நெருக்கடிகளுக்கும் ஜனநாயக வரைபிற்குட்பட்ட வகையில் தி ர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றியை வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெறும் வாக்கெடுப்பில் தெரிவத்தாட்சி அலுவலராக பணிபுரியவுள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) உறுப்புரைக்கமைய வாக்கினை பதிவு செய்தல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வினை எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டுவதற்கும்,தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவும் அப்பிரரேரணையை சபைக்க சமர்ப்பிக்க பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பிலான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

