பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடை செய்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெல சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகம் அதனை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களால் பொதமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, வெலிக்கட பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

