இலங்கை ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை பதிவுசெய்துள்ளார் .
இலங்கை ஜனாதிபதியாக நாளை எவர் பதவியேற்றாலும் இலங்கையும் அதன் மக்களும் இந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் இந்திய மக்களும் தொடர்ந்து உதவவேண்டும் என்பது தனது பணிவான அக்கறையுள்ள வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.

