கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை

260 0

கட்டுநாயக்க, மஹகம ஹினடியான பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு 38 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த குழுவொன்று நேற்று இரவு வாள்களால் தாக்கப்பட்டு கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.