ஜனாதிபதி மாளிகையில் கஞ்சாவுடன் இளைஞர் கைது

378 0

ஜனாதிபதி மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா அடங்கிய பொதி ஒன்றுடன் இளைஞர் ஒருவர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனாதிபதி மாளிகையில் சேவையில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் இளைஞர் ஒருவரை பரிசோதனை செய்த போது கஞ்சா அடங்கிய பொதியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.