பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சுதந்திர கட்சியினர் கொண்டு வர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தாமல் நாகரீகமான முறையில் பதில் ஜனாதிபதி பதவி விலகுவதாக அமையும் என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசிங்க வீரசுமன தெரிவித்தார்.
அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன்,மக்களி;ன் வலுயுறுத்தலுக்கமைய பராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்து சகல கட்சிகளின் பங்குப்பற்றலுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்தோம்.
அனைத்து எதிர்பார்ப்பிற்கும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடையேற்படுத்தியுள்ளார்.
கோட்டா- ரணில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளமை மக்களின் அபிலாசைக்கு முற்றிலும் எதிரானது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தீவிரப்படுத்தியுள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர சுதந்திர கட்சி அவதனாம் செலுத்தியுள்ளமை தொடர்பில் சுயாதீன ஏனைய கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து உரிய தீர்மானத்தை அறிவிப்போம்.
அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்தாமல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும்.ஜனநாயகத்தை பேச்சளவில் மாத்திரம் குறிப்பிடாமல் செயலளவிலும் செயற்படுத்த வேண்டும் என்றார்.

