நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் தரப்பில் சுயேச்சையான குழுவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (12) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டத்தின் ஊடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

