தமிழர் விளையாட்டு விழா யேர்மனி 2022

898 0

யேர்மனியில் தமிழர் விளையாட்டு விழா கொரோனா விசக்கிரிமியின் தாக்கம் காரணமாக இணர்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தது. இந்த வருடம் டோட்முன்ட் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கிளித்தட்டு விளையாட்டில் ஆண்கள் பெண்கள் அணிகள் சிறப்பாகப் பங்குபற்றி விளையாடினார்கள். அத்தோடு. ஊதைபந்தாட்டம், துடுப்பாட்டம், மெய்வல்லுனர் போட்டிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், கரப்பந்தாட்டம்;, சங்கீதக்கதிரை மற்றும் கயிறுழுத்தல் போட்டி என்பன நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தமிழீழ மக்கள் தங்கள் அடையாளத்துடன் இவ் விளையாட்டினை ஆரம்பித்து சிறப்பாக நிறைவு செய்தனர்.