டென்மார்க்கின் கொல்பேக், ஈகாஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு.

406 0

தாயக விடுதலைப் போரில் தமது உயிரைப் போராயுதமாக்கி எமது இனத்தின் காப்பரண்களாக திகழ்ந்தவர்கள் கரும்புலிகள்!

அவர்களை நெஞ்சிலேந்தி, கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் அகவணக்கம், பொதுச் சுடரேற்றம், பொதுமக்களின் ஈகைச் சுடரேற்றம் மற்றும் மலர்வணக்கத்துடன் கரும்புலிகள் கானங்கள் இசைக்கப்பட்டு உணர்வுபூர்வமாக இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வு இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன்  நிறைவு பெற்றது.

டென்மார்க் ஈகாஸ் நகரில்   (09.07.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற  கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு.

கரும்புலி நாள் எழுச்சி நிகழ்வானது கரும்புலிகளின் திருவுருவப் படத்திற்கு ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து கரும்புலிகளுக்கு மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

எழுச்சி நிகழ்வுகளாக கவிதை பேச்சுக்களுடன், கரும்புலிகளின் வீரவரலாறுகள் டெனிஸ் மொழியிலும் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், தமிழர்களின் தாரக மந்திரமான  “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எழுச்சிக் கோசத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.