அடுத்த தேர்தல் வரை ஊழல் அற்ற ஒருவர் நாட்டை பொறுப்பேற்க வேண்டும்: நடேசன் சுந்தரேசன்

206 0

“ஊழல் அற்ற ஒருவர் அடுத்த தேர்தல் வரும் வரையில் நாட்டை பொறுப்பேற்று முன்கொண்டு செல்ல வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் போராட்டங்களையும் இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல்களையும் வெளிகொணர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நாட்டினை கொள்ளையிட்ட பெரும் கொள்ளைக்கூட்டம் மக்களினால் துரத்தியடிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களும் துரத்தியடிக்கப்பட வேண்டும்”என தெரிவித்தார்.