ஓ.பி.எஸ்., அதிரடி – தலைவர்கள் கருத்து

229 0

சசிகலா முதல்வராக பதவியேற்க பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா சமாதி முன்பு அவர் பேட்டியளித்திற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: பன்னீர் செல்வத்தின் பேட்டியின் மூலம் அவரை ஆட்சி நடத்த விடாமல் தடுத்துதிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதை கடந்த சில தினங்களுக்கு முன்பே நான் தெரிவித்திருந்தேன். இன்று அவரே ஒத்து கொண்டுள்ளார்.

தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்: முதல்வரின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. முதல்வரை செல்படவிடாமல் சிலர் தடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் முனுசாமி: பன்னீர் செல்வத்தை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்து கையெழுத்து வாங்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் சாசனபடி கவர்னர் ஆட்சியமைக்க வேண்டும். தன்மானத்துடன் பேட்டியளித்துள்ளார் பன்னீர் அவரை நான் வாழ்த்துகிறனே். இவரின் பேட்டி மூலம் சசிகலா தான் பன்னீரை செயல்படவிடாமல் செய்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன்: தற்போதைய நிகழ்வுகளுக்கு அ.தி.மு.க.,வே முழு முதற் காரணம். முதல்வரையே பதவியை விட்டு விலக சொல்லி உள்ளனர். அதிமுக., அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். உண்மை நிலைக்கு ஏற்றவாறு பதில் வரும் என நம்புகிறேன்.