பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதம்!

304 0

விடுதலைப்புலிகளின் முதல் தற்கொடைத் தாக்குதல் 1987 சூலை மாதம் 5ம் திகதி சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக கப்டன் மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாம் மீது நடாத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கப்டன் மில்லர் தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளே கரும்புலிகள் நாள் ஆகும்.

தரைக் கரும்புலிகள், கடற் கரும்புலிகள்,வான் கரும்புலிகள், மறைமுகக் கரும்புலிகள் என காலத்தின் தேவை கருதி கரும்புலிகள் பல பரிமாணங்களில் தமது தற்கொடை தாக்குதலை மேற்கொண்டனர்.

கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும்.

“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்..

மறைமுகக் கரும்புலிகள் போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள்.

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

இந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் இணைந்து சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.