ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி: மருத்துவர்கள்

221 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.5.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.5.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் குழுவினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவினை அவரது உறவினர்கள் அளித்ததாக அவர்கள் கூறினர். சிகிச்சைக்கு ஆன செலவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதனை மருத்துவர்கள் தெளிவு படுத்தினர்.

முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் காலமானார்.